பாரம்பாிய நெல் ரகங்கள் கண்காட்சி
குருக்கத்தி வேளாண்மை கல்லூரியில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை கலெக்டர் அருண்தம்புராஜ் ெதாடங்கி வைத்தார்.
சிக்கல்:
குருக்கத்தி வேளாண்மை கல்லூரியில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை கலெக்டர் அருண்தம்புராஜ் ெதாடங்கி வைத்தார்.
கண்காட்சி
நாகை மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உயர்தர உள்ளுர் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் அகண்ட ராவ் வரவேற்றார். மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் அருண்தம்புராஜ் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரம்பரிய நெல் ரகங்கள்
குருக்கத்தி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் பாரம்பரிய நெல் கண்காட்சியில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் இருந்தும் உயர்தர உள்ளூர் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வரும் மற்றும் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் தூயமல்லி, கருப்புகவுனி, குள்ளங்கார், பூங்கா ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.
முன்னுரிமை
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்..
இதை தொடர்ந்து 5 பயனாளிகளுக்கு பாரம்பரிய பூங்கா நெல் ரகங்கள் அக்ரிஸ்டாக் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்திய 34 வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இதில் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அதிகாரி ரவி, வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வேளாண்மை, தோட்டக்கலை துறை அலுவலர்கள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.