ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் கண்காட்சி
ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்மூலம் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி கலெக்டர் பாஸ்க் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கண்காட்சியை தொடங்கி வைத்து, கண்காட்சியில் இடம்பெற்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள், நவதானியங்கள், இயற்கை முறையில் பயிரிடும் பொருட்களையும் பார்வையிட்டார்.
கல்லூரி செயலாளர் கருணாநிதி, வேளாண்மை கல்லூரி முதல்வர் தானுநாதன், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ரத்தின சபாபதி, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது சாதிக், மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி. சாரதி, திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவர் சத்யா, துணைத்தலைவர் ரமேஷ், கலவை தாசில்தார் சமீம், ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் விதைகளையும், பாரம்பரிய தானியங்கள் பற்றியும் அதிகாரியிடம் கேட்டு அறிந்தனர்.