என்ஜினீயர் சங்க மைய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்
என்ஜினீயர் சங்க மைய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்
நாகையில் என்ஜினீயர் சங்க மைய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் இந்திய கட்டுனர் சங்க நாகை மைய 2023 - 2024-ம் ஆண்டு பொறுப்பாளர்கள் தேர்வும் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மீரா உசேன் தலைமை தாங்கினார். அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் நவாப் ஜான், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் சிவகுமார், துணை தலைவர் தங்கதுரை, துணைசெயலாளர் முகமது கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகையின் வளர்ச்சி குறித்த செயல் திட்டத்தை உருவாக்க அனைத்து சேவை சங்கங்கள், பொதுநல அமைப்புகள், ஊர் பஞ்சாயத்துக்கள், வார்டு பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நாகையின் வளர்ச்சிக்கு வித்திட செயல்வடிவம் ஏற்படுத்துவது. நகராட்சி எல்லைகளை விரிவுபடுத்தி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது. நாகை மாவட்டத்தில் உள்ள தொழில் நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் தொடங்க ஆலோசனைகள் வல்லுனர்கள் மூலம் வழங்குவது. நாகை மாவட்டத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாகையை சேர்ந்த பல்வேறு என்ஜினீயர்கள் கலந்து கொண்டனர்.