கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடை
கோவையை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சி கணேசபுரத்தில் பொதுமக்கள் குடியிருப்பு அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை கட்டப்பட்டு உள்ள இடத்தின் முன்பு நேற்று காலை பொதுமக்கள் திரண்ட னர். இதனால் அங்கு கடை திறக்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் நேற்று பிற்பகல் 12 மணியளவில் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
பொதுமக்கள் முற்றுகை
அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். சிலர் கலெக்டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கணேசபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அந்த கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. எனவே அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தோம். அதை ஏற்று டாஸ்மாக் கடை அங்கிருந்து மாற்றப்பட்டது.
திறக்க கூடாது
ஆனால் தற்போது காளப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை எங்கள் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேலை நடந்து வருகிறது. கடை அமைக்கப்பட்டு வரும் பகுதியின் அருகே 2 பள்ளிகளும், பெண்கள் வேலை செய்யும் இடங்களும் உள்ளன.
இங்கு டாஸ்மாக் மதுக்கடை திறந்தால் பள்ளி மாணவ- மாணவி கள், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.