மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றி வந்தபோது கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றி வந்தபோது கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-29 05:31 GMT

பெங்களூருவில் இருந்து நுங்கம்பாக்கம் நோக்கி நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரி ஒன்று மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை அருகே லாரி வந்தபோது, கன்டெய்னர் லாரியின் முன்பகுதியிலிருந்து திடீரென புகை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். ஆனால் அதற்குள் லாரி மள,மளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் தீயணைப்பு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதில் சில மின்சார மோட்டார் சைக்கிள்களில் தீப்பற்றியதில் லேசான சேதத்துடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்