பிளஸ்-2 பொதுத்தேர்வில் கம்ப்யூட்டர் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வில் கம்ப்யூட்டர் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது

Update: 2023-03-17 18:45 GMT

மதுரை, 

பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று புள்ளியியல், கம்ப்யூட்டர் அறிவியல், நர்சிங், ஆங்கில தொடர்பியல், மனையியல், அரசியல் அறிவியல், மரபு மற்றும் இந்திய கலாசாரம், அட்வான்ஸ் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், அடிப்படை எலெக்டிரிகல் என்ஜினீயரிங், பயோ கெமிஸ்டிரி ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடந்தது. மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வில், புள்ளியியல் பாடத்தை 84 மாணவர்களில் 8 பேர் எழுதவில்லை. கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 9,371 மாணவர்களில் 232 பேரும், நர்சிங் பாடத்தில் 69 மாணவர்களில் 7 பேரும், மனையியல் அறிவியல் 237 பேரில் 21 பேரும், அரசியல் அறிவியல் பாடத்தில் 449 பேரில் 76 பேரும், மரபு மற்றும் இந்திய கலாசாரத்தில் 102 பேரில் 11 பேரும், அட்வான்ஸ் தமிழ் தேர்வில் 375 மாணவர்களில் 38 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் 8,663 பேரில் 455 பேரும், அடிப்படை எலெக்டிரிகல் என்ஜினீயரிங் பாடத்தில் 145 மாணவர்களில் 14 பேரும் தேர்வெழுத வரவில்லை. பயோ கெமிஸ்டிரி பாடத்தில் 14 மாணவர்களும், ஆங்கில தொடர்பியல் 15 மாணவர்களில் அனைவரும் தேர்வெழுத வந்திருந்தனர். தனித்தேர்வர்களில் கம்ப்யூட்டர் அறிவியலுக்கு 4 பேரும், அரசியல் அறிவியலுக்கு 3 பேரும், அட்வான்ஸ் தமிழ்த்தேர்வுக்கு ஒரேயொரு மாணவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தேர்வில் 3 மாணவர்களும் தேர்வெழுத வரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்