முன்னாள் ராணுவவீரர் இடத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றினர்

பெண் தர்ணாபோராட்டம் காரணமாக முன்னாள் ராணுவவீரர் இடத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றினர்.

Update: 2022-10-18 16:54 GMT

அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலை கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது தந்தை ராமு முன்னர் ராணுவவீரர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராமுஇறந்து விட்டார்.அவரது பெயரில் 300 சதுர மீட்டர் பரப்பில் பூர்வீக வீட்டு மனை உள்ளது. அரசு வரைபடத்தில் இது பிழையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனை திருத்தம் செய்ய வேண்டுமென பலமுறை வருவாய்த்துறையினருக்கு விஜயலட்சுமி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிய வருகிறது. இதனால் வேதனை அடைந்த விஜயலட்சுமி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தார். அவர் இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது பூர்வீக வீட்டுமனை வரைபடம் தவறாக உள்ளதாகவும் சரி செய்யக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து கலெக்டர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தெரிவிக்கப்படவே அவரது உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார்கள் ராமலிங்கம் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர்.

அவர்களது முன்னிலையில் தலைமை நில அளவை சதீஷ் பள்ளிகொண்டா பிர்கா நில அளவர் திலீப் மற்றும் ஊழியர்கள் விஜயலட்சுமிக்கு சொந்தமான கூட்டாக உள்ள நிலத்தை சுமார் 6 மணி நேரம் அளவீடு செய்து 300 சதுர மீட்டர் இடத்துக்கு எல்லைக்கல் ஊன்றினர். அப்போது இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு பட்டா வழங்குவதாக வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்