முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சி - இறுதிகட்ட பணிகள் தீவிரம்
வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
சென்னை,
தமிழக அரசு சார்பில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னை மாநில கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் சிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.
சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார். மேலும் இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சி நாளை நடக்க உள்ள நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.