தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள்

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை நடக்கிறது.

Update: 2023-07-09 08:36 GMT

தமிழ்நாடு நாள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் செய்தி குறிப்பு எண்.988 நாள் 30.10.2021-ல் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என தெரிவித்து பின்வருமாறு அறிவிக்கப்பட்டது. தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.7.1967-ம் நாளையே பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்று பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

கட்டுரை, பேச்சு போட்டிகள்

இந்த அறிவிப்பிற்கிணங்க 2023-2024-ம் ஆண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நாளை(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் காஞ்சீபுரம், எஸ்.எஸ்.கே.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்றுவர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

கட்டுரை போட்டிக்கான தலைப்புகள்:- தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்

பேச்சு போட்டிக்கான தலைப்புகள்:- தமிழ்த்திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்.

பரிசுத்தொகை

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அநத செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்தும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்