திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 8-ந் தேதி நடக்கிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 8-ந் தேதி நடக்கிறது

Update: 2022-07-05 17:07 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் றிவித்திருந்தார். அதன்படி 6 முதல் 12-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 8-ந் தேதி அன்று காலை 10 மணியளவில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்க த்தில் மா.பொ.சி, சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.

மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்