ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.;

Update:2023-02-06 08:17 IST

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் பலரும் ஈரோடு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் இதுவரை மொத்தம் 46 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் வேட்பாளர் தென்னரசு வேட்பு நாளை மனு தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்