ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம்...!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2023-01-18 11:17 GMT

சென்னை,

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து 3 வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதியை யும் அவர் வெளியிட்டார்.

அதன்படி, காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஜன.31, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப். 7, வேட்புமனு பரிசீலனை பிப். 8, வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் பிப். 10, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதியும் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, நகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து, மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்