ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்-ஜி.கே.வாசன் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவார் என ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-23 18:30 GMT

இரட்டை இலை சின்னம்

புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு ேபட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். அவர் உறுதியாக வெற்றி பெறுவார். கூட்டணியில் முதன்மையான கட்சியான அ.தி.மு.க. பல்வேறு தேர்தல் வியூகங்களை எங்களோடு கலந்து பேசியது.

இந்த தேர்தலில் உறுதியாக வெல்ல வேண்டும் என்பதற்காக நல்ல சூழலை ஏற்படுத்த நினைத்தோம். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்அடிப்படையில் வெற்றி முடிவை த.மா.கா. இந்த தேர்தலில் எடுத்திருக்கிறது. அ.தி.மு.க. தங்களுடைய வேட்பாளரை போட்டியிட எங்களிடம் விருப்பம் தொிவித்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எதிர்மறை ஓட்டு

இந்த தேர்தலில் த.மா.கா. போட்டியிடாமல் எடுத்த முடிவு வருங்கால வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளம் என்று நான் நினைக்கிறேன். எங்களது கூட்டணியில் பா.ஜனதாவும் தொடருகிறது. மக்களின் நம்பிக்கையை தி.மு.க. இழந்திருக்கிறது. அதனை இந்த இடைத்தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெற வியூகத்தை வகுத்திருக்கிறோம்.

தி.மு.க. ஆட்சியில் மக்கள் மீது சுமையை ஏத்தியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. எதிர்மறை ஓட்டு நாளுக்கு நாள், மணிக்கு மணி அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுவே எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்