ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ்க்கு ஒதுக்கியது திமுக.

Update: 2023-01-19 14:52 GMT

ஈரோடு,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா, த.மா.கா. சார்பில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜா ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 994 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இதற்கிடையில் கடந்த 4-ந்தேதி மாரடைப்பு காரணமாக திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க.வே நேரடியாக போட்டியிடுமா? என்ற பரபரப்பு எழுந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரச் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ்க்கு ஒதுக்கியது திமுக. 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக தமிழக காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்.,-க்கு ஒதுக்கப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் ஒதுக்கீடு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்