லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

Update: 2023-02-27 01:30 GMT
Live Updates - Page 3
2023-02-27 03:03 GMT



2023-02-27 03:03 GMT

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சம்பத் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்....!



2023-02-27 03:01 GMT

மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - தேர்தல் அலுவலர் சிவக்குமார்



2023-02-27 03:00 GMT

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - தேமுதிக வேட்பாளர்



2023-02-27 02:48 GMT

தேமுதிக வேட்பாளர் வாக்களித்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது, அவர் தேமுதிக கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததால் அவரை வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துவிட்டார்.

இதனால், தேர்தல் அதிகாரியிடன் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் அதிகாரி அறிவுரை கூறினார்.

இதனை தொடர்ந்து கட்சி அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சி துண்டு, வேட்டியை மாற்றிவிட்டு அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கை பதிவு செய்தார். 

2023-02-27 02:47 GMT

கட்சி துண்டு அணிந்து வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளர் அனுமதி மறுப்பு - பரபரப்பு...!



2023-02-27 02:24 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை முன்கூட்டியே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தங்கள் செல்போனை யாரிடம் கொடுத்து செல்வது என்று தெரியாமல் வாக்காளர்கள் தவித்து வருகின்றனர். 


 

2023-02-27 01:57 GMT

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்களித்தார்



2023-02-27 01:37 GMT

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

2023-02-27 01:33 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் 4-ம் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வேட்புமனுக்களை பரிசோதித்த தேர்தல் அதிகாரி இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்த முள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 ஆகும். இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 1 ஆயிரத்து 206 அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் சுமூகமாக நடைபெற துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்