லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட நேரமாக வரிசையில் நிற்கும் பெண் வாக்காளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை 5.30 மணிக்கு மேல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் டோக்கன் பெற்று வாக்களித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்துவரும் 138வது வாக்குச்சாவடியில், வாக்களிக்க மக்கள் காத்து இருக்கின்றனர். பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் என்பதால், பணி முடிந்த பின்னர் இவர்கள் வாக்களிக்க வந்தனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 மணிக்கு பிறகு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை ஆறு மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஆறு மணிக்கு முன் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 59.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை 27.89 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.