ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக... ... லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் 4-ம் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வேட்புமனுக்களை பரிசோதித்த தேர்தல் அதிகாரி இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்த முள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 ஆகும். இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 1 ஆயிரத்து 206 அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் சுமூகமாக நடைபெற துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.