ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிப்பு...!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதி தொடர்ந்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Update: 2023-01-18 07:59 GMT

சென்னை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வே.ரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

எந்த தேதியில் தொகுதி காலி என்று அறிவிக்கப்படுகிறதோ அதே நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க வேண்டும். பொதுவாக இடைத்தேர்தல் செலவை கட்டுப்படுத்தும் விதமாக பெரிய தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும். வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் இடைத்தேர்தல்கள் தனியாக நடத்தப்படும். ஆனால் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் எதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள் நடக்க வாய்ப்பு இல்லை. இதனால் இன்று அறிவிக்கப்பட உள்ள மற்ற மாநில தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. இதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்