விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு விராலிமலையில் உற்சாக வரவேற்பு

மகளிர் போலீஸ் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு விராலிமலையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-03-22 19:09 GMT

தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கடந்த 17-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10-வது பட்டாலியன் கமாண்டர் மணிவண்ணன் தலைமையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது பெண்கள் பாதுகாப்பு, போதைக்கு அடிமையாக வேண்டாம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கி நேற்று விராலிமலையை வந்தடைந்தது. அவர்களுக்கு விராலிமலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விராலிமலை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை கொண்டமநாயக்கன்பட்டி இணைப்பு சாலையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் விராலிமலை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் மதியம் தொடங்கிய பேரணியை இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தொடங்கி வைத்தார். இப்பேரணியானது 27-ந் தேதி கன்னியாகுமரியை சென்றடையும். இந்த விழிப்புணர்வு பேரணியில் 127 மகளிர் போலீசார், சைபர் கிரைம் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்