என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
பண்ருட்டியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்துள்ள எல்.என்.புரம் நயினார் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திக் (வயது 29). என்ஜினீயரிங் படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை பார்த்த அவர், கடந்த 3 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். தற்போது ஊரில் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார்.
இதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் சம்பவத்தன்று விஷத்தை குடித்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பரிதாபமாக நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.