சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Update: 2022-07-05 20:21 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையோரமாக தனியார் ஒருவர் சுற்றுசுவர் கட்டியிருந்தார். அந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நகராட்சி சார்பில் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச்சுவரை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். அப்போது சுவர் கட்டியிருந்த தனியார் வந்து இது எங்களுக்கு சொந்தமான இடம். எப்படி நீங்கள் இடிக்கலாம்?.. இதற்கு உரிய ஆவணம் என்னிடம் உள்ளது. என அவர் கேள்வி கேட்டாா். அதற்கு நகராட்சி கமிஷனர் சரவணகுமார், தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம். அதற்கு ஆவணம் உள்ளது. இதுகுறித்து பேசி முடிவெடுக்கலாம் என்று கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்