காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் 15 மாதங்களில் அமல்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-09 11:09 GMT

சென்னை,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள், மலை பிரதேசங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, காலி பாட்டில்களை திரும்பி செலுத்தும்போது அந்த தொகையை திருப்பு கொடுக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்திய பின், கடந்தமாதம் 95 சதவீத மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டதாக டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை படிப்படியாக இரண்டு ஆண்டுகளில் மாநிலம்முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் 15 மாதங்களில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்