அரசு கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
அரசு கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
பொள்ளாச்சி
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற இறுதி ஆண்டு மாணவர்கள் 148 பேர் ரூ.2 லட்சம் ஆண்டு வருமானத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை பெற்று உள்ளனர். இந்த நிலையில் கல்லூரி முதல்வர் அந்தோணி டேவிட் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூமாலை, ஆங்கிலத்துறை தலைவர் செந்தில் நாயகி, கணிதத்துறை தலைவர் புஷ்பலதா, பேராசிரியர் ரஞ்சித்குமார், கற்பகவல்லி, தமிழ்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.