16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிறமலைக்கள்ளர் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

தேனி பங்களாமேட்டில் தமிழ் மாநில பிறமலைக்கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2022-10-13 15:03 GMT

தேனி பங்களாமேட்டில் தமிழ் மாநில பிறமலைக்கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு டி.என்.டி., டி.என்.சி. என்று வழங்கிய சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும். முழுமையான டி.என்.டி. என்ற ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும். கள்ளர் சீரமைப்பு துறையை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாண்டி, பொருளாளர் அழகுசிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்