ஊருக்குள் புகுந்த யானைகள்

பாலக்கோடு அருகே ஊருக்குள் 2 யானைகள் புகுந்து சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2023-04-19 18:45 GMT

பாலக்கோடு

யானைகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. வனப்பகுதியில் முகாமிட்டு இருக்கும் இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பஞ்சப்பள்ளி அருகே வேடம்பட்டி கிராமத்தில் 2 யானைகள் புகுந்து சுற்றித்திரிந்து வருகின்றன. மேலும் கரும்பு, சோளம், வாழை, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தின. ஊருக்குள் யானைகள் புகுந்துள்ளதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்