தளி அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்

தளி அருகே கிராமத்துக்குள் காட்டு யானைகள் புகுந்தன.

Update: 2022-09-05 15:50 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில் 7 யானைகள் உள்ளன. நேற்று முன்தினம் 5 யானைகள் தனியாக பிரிந்து கொத்தூர் கிராமத்திற்குள் புகுந்தன. அவற்றை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை நொகனூர் காப்புக்காட்டில் இருந்து 2 யானைகள் தனியாக பிரிந்து தளி அருகே பாலதொட்டனப்பள்ளி சாலையை கடந்து ஒசட்டி கிராமத்திற்குள் புகுந்தன. தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். இதையடுத்து யானைகள் நொகனூர் காப்புக்காட்டுக்குள் சென்றன. அவற்றை ஜவளகிரி நோக்கி விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளதால் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்