பொன்னேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-17 12:26 GMT

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் மின் உற்பத்தி, மின்விநியோகம், விரிவாக்க பணிகள், பொது கட்டுமான பணி ஆகிய இடங்களில் வேலை செய்து வருகின்றனர். 25 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஒப்பந்த ஊழியர்கள் பொன்னேரி மின்வாரிய சென்னை வடக்கு செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் சி.ஐ.டி மாநில துணைத்தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கதிர்வேல், சந்திரசேகர், சத்தியமூர்த்தி, மதனகோபால் உட்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். போக்குவரத்துக்கு இடையுறு செய்த ஆர்ப்பாட்டகாரர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்