மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி

மன்னார்புரம் கல்லறை தோட்டத்துக்கு மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-02 18:52 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் சங்கனாங்குளம் பஞ்சாயத்து மன்னார்புரத்தில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு ஊராட்சி மூலம் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னத்தம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை எட்வர்டு அடிகளார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜோசப் ஆல்ட்ரின், இட்டமொழி சுந்தர் மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சி.நம்பி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்