லஞ்சம் பெற்றதாக கைதான மின்வாரிய அதிகாரிக்கு ஜாமீன்

லஞ்சம் பெற்றதாக கைதான மின்வாரிய அதிகாரிக்கு ஜாமீன்

Update: 2022-10-07 21:08 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வீட்டின் வாசலில் இருந்த பழைய மின் கம்பத்தை அகற்றுவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுவநாதன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொது கல்வி அறக்கட்டளைக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும். வாரந்தோறும் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்