மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களையும் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளர் மாநில தலைவர் ராஜகுரு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் பிபி 2 உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் செய்யும் முறையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் ஜெய்சங்கர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில உப தலைவர் சந்திரன், மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில நிர்வாகி ஞான குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.