வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்... தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2024-05-17 09:50 GMT

கோப்புப்படம் 

சென்னை,

வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் எண், TANGEDCO இலச்சினை (LOGO) மற்றும் பச்சை குறியீடு ஆகியவற்றை உறுதி செய்துவிட்டு கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பதிவில், "மகிழ்ச்சியான செய்தி, வாட்ஸ்அப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம்! தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் செய்தி வசதி அறிமுகம்.

பாதுகாப்பு குறிப்பு: வாட்ஸ்அப் செய்தி TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை குறியீடு, எண் 94987 94987 ஆகியவற்றை உறுதி செய்யவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்