எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பேட்டரி வெடித்து தம்பதி காயம்

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பேட்டரி வெடித்து தம்பதி காயமடைந்தார்.

Update: 2023-02-12 20:16 GMT

பேட்டரி வெடித்தது

திருச்சி உறையூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 29). இவர் சமீபத்தில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வாங்கி பயன்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாஸ்கர் தனது வீட்டில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றி உள்ளார்.பின்னர் சார்ஜரை ஆப் செய்துவிட்டு வீட்டிற்குள் தூங்கினார். அப்போது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் பேட்டரி திடீரென வெடித்தது. இதில் வீட்டில் இருந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகியோர் காயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

அவர்கள் 2 பேரையும், வீட்டில் இருந்த மற்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாஸ்கர், நந்தினி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் உறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்