ஓட்டப்பிடாரம் அருகேமின்சாரம் தாக்கி முதியவர் சாவு
ஓட்டப்பிடாரம் அருகேமின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்துபோனார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.புதூர் மேற்கு கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் குருசாமி (வயது 66). இவர் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் ஆட்டுத் தொழுவில் உள்ள மின்சார ஒயரை அவர் சரி ெசய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சண்முகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.