ஆம்பூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-12 14:27 GMT

ஆம்பூர்

ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு (வயது 65). இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் சிட்டிபாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்