விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 58). இவருக்கு பர்வதம் என்ற மனைவியும் 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கருப்பசாமி தனியாக வசித்து வந்தார். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனமுடைந்த கருப்பசாமி தனது வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், கருப்பசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.