விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
காரியாபட்டி,
வீரசோழன் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 70). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருசாமி வீரசோழன் வயல் பகுதியில் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். உடனே அவரை மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.