சமூக சேவைக்கான விருது பெற்ற எழுமலை இளம்பெண்
சமூக சேவைக்கான விருது பெற்ற எழுமலை இளம்பெண்
உசிலம்பட்டி,
எழுமலையைச் சேர்ந்தவர் சந்திரலேகா(வயது 22). இவர் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளங்கலை சமூகசேவை மற்றும் முதுகலை சமூகசேவை பயின்றவர். தன்னுடைய கிராமத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்தவர். தற்போது கருமாத்தூர் அருகேயுள்ள அழகுசிறையில் உள்ள கருணை இல்லத்தில் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சமூக வளர்ச்சிக்காக பாடுபடும் இளைஞர்களை கண்டறிந்து வழங்கப்படும் முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு இந்த ஆண்டு சந்திரலேகா தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி நேற்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக சேவைக்கான இளைஞர் விருதை சந்திரலேகாவுக்கு வழங்கி பாராட்டினார்.