நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு435 காசுகளாக நிர்ணயம்

Update:2023-09-07 00:30 IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 435 காசுகளாக உயர்ந்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.122-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 35 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்