முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.

Update: 2023-03-10 18:45 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.60-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்