முயற்சியும், பயிற்சியும் அவசியம்

பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சியும், பயிற்சியும் அவசியம் என மயிலாடுதுறையில் நடந்த கல்லூரி விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கூறினார்.

Update: 2023-04-13 18:45 GMT

பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சியும், பயிற்சியும் அவசியம் என மயிலாடுதுறையில் நடந்த கல்லூரி விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கூறினார்.

ஆண்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.அப்போது கலெக்டர் பேசியதாவது:-

பெண்கள் அவசியம் கல்வி கற்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சியும், பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். பெண்கள் உயர்கல்வி பெற வேண்டும். உங்கள் எண்ணங்கள் உயர்ந்த எண்ணங்களாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கான திட்டங்கள்

அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை ஆற்றிட வேண்டும். உங்களால் நீங்கள் வளர வேண்டும் அப்போதுதான் உங்களுடைய சமுதாயம் வளரும். நம் நாட்டில் சாதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். பெண்கள் கையில்தான் எல்லா வளர்ச்சியும் உள்ளது. ஆசிரியர்கள் உன்னதமானவர்கள் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக குறிப்பாக நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது என்றார். முன்னதாக கல்லூரி ஆண்டு விழாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் கல்லூரி முதல்வர் அறவாழி, பேராசிரியர்கள் பானுப்பிரியா, மங்கையர்கரசி, கல்லூரி பேரவை பொறுப்பாளர் சாருலதா, மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்