பள்ளிகளில் கல்வி தரம், குடிநீர் வசதி குறித்து அதிகாரிஆய்வு

நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி தரம், குடிநீர் வசதி குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-11-30 19:00 GMT

நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி தரம், குடிநீர் வசதி குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

கல்வி அதிகாரி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் வட்டார கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

நீடாமங்கலம் வட்டார உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முத்தமிழன் வட்டாரத்தில் உள்ள செருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குடிதாங்கிச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 19.சோத்திரியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள், வடுவூர் சாத்தனூர், கருவாக்குறிச்சி காலனி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கல்வி தரம், குடிநீர்

நீடாமங்கலம் அரசு உதவி பெறும் ஸ்ரீராமவிலாஸ் தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தபோது அவர், 'பள்ளிகளின் அனைத்து பதிவேடுகள் மற்றும் மாணவர்களின் கல்வி தரம், பள்ளியின் கட்டமைப்பு தொடர்பாகவும், குடிநீர் வசதி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியை கீதா, உதவி ஆசிரியை மாலதி ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்