அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் - பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு

சுற்றுப்பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-12 08:41 GMT

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துள்ள அவர், சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர இருக்கிறார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சரான அவருக்கு சுற்றுப் பயணத்தின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் ஏ.பி.மணிகண்டன், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

அதில், "அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நபர்களால், ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருடைய பாதுகாப்பை அதிகரித்து உரிய உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்