பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான தண்டனையை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் - டிடிவி தினகரன் பேட்டி
பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான தண்டனையை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை,
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான தண்டனையை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார். பாஜக உதவியால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினார். பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்கப் போகிறார்?.
பாஜகவை கைவிட்டால் அதிமுக வசம் உள்ள இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு உள்ளது. சின்னம் போனால் அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதறும். கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்துவிட்டாலும் அமமுக தனித்து இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.