டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2024-07-02 08:26 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ந் தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 போ் பாதிக்கப்பட்டனா். இதில் 65 போ் சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், 148 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 16 போ் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாராயம் விற்றதாக கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சோ்ந்த சின்னதுரை உள்பட 21 பேரை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுகவினர் ஆர்பாட்டம், சட்டசபையில் அமளி மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செல்லும் அவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி செல்வதற்குமுன் இன்று மாலை சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்