நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2023-05-12 18:45 GMT

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் நேற்று மழை ஏதும் பெய்யவில்லை. இதனால் அருவியில் நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதற்கிடையே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாய் குளியல்போட்டு சென்றனர். நீர்வரத்து குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்