சென்னையில் கனமழை காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரெயில்கள் மாற்றம்

சென்னையில் கனமழை காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரெயில்கள் மாற்றி விடப்பட்டுள்ளது.

Update: 2023-06-19 09:48 GMT

சென்னை,

சென்னையில் கனமழை காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரெயில்கள் மாற்றி விடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் திருவள்ளூர், ஆவடி, கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரெயில், லால்பாக் விரைவு ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்