பொள்ளாச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் நேற்று பெண் ஒருவர், குடிபோதையில் போக்குவரத்தை சரி செய்வது போன்று நடித்து சாலையில் நடனமாடி கொண்டு இருந்தார். பின்னர் வெயிலை பொருட்படுத்தாமல், தரையில் படுத்து உருண்டார். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நேரில் வந்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் மகளிர் போலீசாரை வரவழைத்து, அந்த பெண்ணை தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.