மதுபோதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்த கொத்தனார் பலி
மதுபோதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்த கொத்தனார் பலியானார்.
கன்னங்குறிச்சி:
திருப்பூர் மாவட்டம் ஏழரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 38), கொத்தனார். இவர் கன்னங்குறிச்சி எஸ்.சி.சி.டி. காலனியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜய் மதுபோதையில் வீட்டின் மாடி படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.