ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

தூசி கிராமத்தில் ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-12 17:31 GMT

தூசி

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வி.வெங்கடேசன் மேற்பார்வையில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் தூசி கிராமம் உடையார் தெருவில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான வீட்டை சோதனை செய்தனர்.

சோதனையில் சுமார் 45½ கிலோ எடையுள்ள 13 மூட்டைகளில் குட்கா போன்ற போதைப்பொருட்கள் மறைத்து விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.53 ஆயிரமாகும்.

இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள திருப்பதியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்