பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
குன்னம்:
குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரியா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குன்னம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நதியா கலந்து கொண்டு போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். கருத்தரங்கில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.